தருமபுரி, ஜூலை 25 | ஆடி 08 -
தருமபுரி மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயிகள் சந்திக்கும் வேளாண்மை தொடர்பான பிரச்சனைகளை நேரில் கேட்டறிந்து தீர்வு காணும் வகையில், விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வருகிற 31.07.2025 வியாழக்கிழமை, காலை 11.00 மணிக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் கூடுதல் கூட்ட அரங்கில் நடைபெற உள்ளது.
இந்த கூட்டம், மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. ரெ. சதீஸ், இ.ஆ.ப. அவர்களின் தலைமையில் நடைபெறவுள்ளது. மாவட்டத்தைச் சேர்ந்த அனைத்து விவசாயிகளும் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டு, தங்களது வேளாண்மை குறைகள், தேவைகள் மற்றும் ஆலோசனைகளை மாவட்ட நிர்வாகத்தினரிடம் தெரிவித்துப் பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. இந்த கூட்டம், அரசு மற்றும் விவசாயிகளுக்கு இடையே நேரடி தொடர்பை ஏற்படுத்தி, நிலையான தீர்வுகளைத் தேடுவதற்கான ஒரு சிறந்த வாய்ப்பாக அமைவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.