தருமபுரி, ஜூலை 4 (ஆனி 20) -
சாதிபாகுபாடற்ற சமூக ஒற்றுமையையும் நல்லிணக்கத்தையும் பேணும் ஊராட்சிகளை ஊக்குவித்து கௌரவிக்கும் வகையில், தமிழக அரசு தருதிகொண்ட 10 ஊராட்சிகளுக்கு சமூக நல்லிணக்க ஊராட்சி விருது வழங்கும் திட்டத்தை அறிவித்துள்ளது. இந்த விருதுடன் தலா ரூ.1 கோடி நிதி வழங்கப்படும்.
2025 ஆம் ஆண்டுக்கான இந்த விருதை பெற விரும்பும் ஊராட்சிகள், தங்களது விண்ணப்பங்களை தேவையான supporting ஆவணங்களுடன் இணைத்து கீழ்கண்ட இணையதளங்களில் பதிவிறக்கம் செய்யக்கூடிய விண்ணப்பப் படிவத்தின் மூலம் சமர்ப்பிக்கலாம்:
அல்லது மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்தில் இருந்து விண்ணப்பப் படிவங்களை நேரில் பெற்றுக்கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை 20.07.2025க்குள் மேற் கூறிய அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும். இத்தகவலை தருமபுரி மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. ரெ. சதீஸ், இ.ஆ.ப. அவர்கள் வெளியிட்டுள்ளார்.