தருமபுரி, ஜூலை – 4 (ஆனி 20):
தருமபுரி மற்றும் அரூர் அரசினர் தொழிற்பயிற்சி நிலையங்களில் ஆகஸ்ட் 2025 முதல் நடைபெறும் தொழிற்பயிற்சி வகுப்புகளுக்கான நேரடி சேர்க்கை 31.07.2025 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அரசு மற்றும் தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களில் உள்ள பல்வேறு பிரிவுகளுக்கு ஆண், பெண் இருபாலரும் விண்ணப்பிக்கலாம்.
வயது வரம்பு:
-
ஆண்கள்: 14 முதல் 40 வயது வரை
-
பெண்கள்: குறைந்தபட்சம் 14 வயது (மேலவரம்பு இல்லை)
கல்வித் தகுதி மற்றும் தொழிற்பிரிவுகள்:
🔹 8-ம் வகுப்பு தேர்ச்சி:
-
கம்பியாள் (2 வருடம்)
-
பற்றவைப்பவர் (1 வருடம்)
🔹 10-ம் வகுப்பு தேர்ச்சி:
-
கோபா (1 வருடம்)
-
கட்டடபட வரைவாளர், மின்பணியாளர், பொருத்துநர், கம்மியர் – மோட்டார்/டீசல், இயந்திர வேலை (2 & 1 வருடம்)
🔹 புதிய தொழிற்நுட்பப் பிரிவுகள்:
-
Industrial Robotics & Digital Manufacturing
-
Electric Vehicle Mechanic
-
Basic Designer & Virtual Verifier
-
Advanced CNC Machining Technician
சலுகைகள்:
-
மாதம் ரூ.750 உதவித்தொகை
-
இலவச பாடப்புத்தகம், கருவிகள், சீருடை, மிதிவண்டி, பேருந்து பயண அட்டை, மூடுகாலணி
-
விடுதி வசதி, தமிழ் புதல்வன் மற்றும் புதுமைப்பெண் திட்டத்தினூடே மாதம் ரூ.1000 கல்வி உதவித்தொகை
இச்சேர்க்கையை பயன்படுத்தி மாணவ, மாணவியர்கள் பயனடையுமாறு தொழிற்பயிற்சி நிலைய முதல்வர் கேட்டுக்கொண்டுள்ளார். இத்தகவலை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. ரெ. சதீஸ், இ.ஆ.ப. அவர்கள் வெளியிட்டுள்ளார்.