தருமபுரி, ஜூலை 4 (ஆனி 20) -
தருமபுரி மாவட்டத்தில் செயல்பட்டு வரும் மாவட்ட மகளிர் அதிகார மையம் (DHEW) சமூக நலத்துறையின் கீழ் மத்திய, மாநில அரசு திட்டங்களை ஒருங்கிணைத்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது. தற்போது, இந்த மையத்தில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்பும் நோக்கில், கீழ்கண்ட பணிகளுக்கு தகுதியான விண்ணப்பதாரர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன:
பணியின் பெயர் | காலியிடங்கள் | தகுதி & வயது | அனுபவம் | ஊதியம் (மாதம்) |
---|---|---|---|---|
கணிப்பொறி இயக்குபவர் (PMMVY திட்டம்) | 1 | பட்டப்படிப்பு, கணினித் திறன், வயது 35க்குள் | குறைந்தது 3 ஆண்டு அனுபவம் | ₹20,000 |
கணிப்பொறி இயக்குபவர் (Mission Shakthi திட்டம்) | 1 | பட்டப்படிப்பு, கணினித் திறன், வயது 35க்குள் | குறைந்தது 3 ஆண்டு அனுபவம் | ₹20,000 |
பல் திறன் உதவியாளர் (MTS) | 1 | 10வது/12வது தேர்ச்சி, வயது 35க்குள் | - | ₹12,000 |
விண்ணப்பத்தினை www.dharmapuri.nic.in இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து, தேவையான சான்றுகளுடன், 21.07.2025 மாலை 5.00 மணிக்குள், மாவட்ட சமூக நல அலுவலகம், கூடுதல் கட்டிடம், மாவட்ட ஆட்சியர் வளாகம், தருமபுரி என்ற முகவரிக்கு நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ அனுப்ப வேண்டும். மேலும் தகவலுக்கு: 04342 – 230544 என்ற எண்ணில் தகவல் பெறலாம், இத்தகவலை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. ரெ. சதீஸ், இ.ஆ.ப. அவர்கள் வெளியிட்டுள்ளார்.