Type Here to Get Search Results !

தருமபுரி அரசு கலைக்கல்லூரியில் கார்கில் போரில் உயிர்நீத்த வீரர்களுக்கு வீரவணக்கம் – மாவட்ட ஆட்சியர் மரியாதை செலுத்தினார்.


தருமபுரி, ஜூலை 26 | ஆடி 10 -

தருமபுரி அரசு கலைக்கல்லூரியில் இன்று முன்னாள் படைவீரர்கள் நலத்துறையின் சார்பில், 1999ஆம் ஆண்டு நடந்த கார்கில் போரில் வீரமரணம் அடைந்த இந்திய ராணுவ வீரர்களின் தியாகத்தை நினைவு கூர்ந்து மரியாதை செலுத்தும் நிகழ்வு மரியாதையுடன் நடைபெற்றது.


இந்நிகழ்வில் தருமபுரி மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. ரெ. சதீஸ், இ.ஆ.ப., அவர்கள் மலர் வளையம் வைத்து வீரர்களுக்கு வீரவணக்கம் செலுத்தினார். முன்னாள் ராணுவ வீரர்கள், அரசு அலுவலர்கள், மாணவ மாணவியர்கள், பொதுமக்கள் ஆகியோர் நிகழ்வில் கலந்து கொண்டு தங்கள் மரியாதையை பதிவு செய்தனர்.


1999 இல் ஜம்மு & காஷ்மீர் மாநிலத்தில் கார்கில் பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் கைப்பற்றிய உயரமான மலைப்பகுதிகளை மீட்க இந்திய ராணுவம் தொடங்கிய "ஆப்பரேஷன் விஜய்" பூரண வெற்றியடைந்தது. இந்த போரில் 500க்கும் மேற்பட்ட இந்திய வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். இந்த வெற்றியை நினைவு கூறி ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 26 அன்று “கார்கில் விஜய் திவஸ்” நாடு முழுவதும் அனுசரிக்கப்படுகிறது.


இந்த நிகழ்வின் போது, வீரமரணங்களை நினைவு கூர்ந்து மெழுகுவர்த்தி ஒளி ஏற்றப்பட்டது, தேசியக் கீதம் இசைக்கப்பட்டது. வீரர்களின் புகைப்படங்களுக்கு முன்னால் மாணவர்கள் மலர் அஞ்சலி செலுத்தினர். 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies