“ஏங்க… ஹெல்மெட்ட போடுங்க! பாதுகாப்பா போங்க!! சாலை விதிகளை கடைபிடிப்போம்! விபத்தில்லா தர்மபுரியை உருவாக்கிடுவோம்!!” எனும் விழிப்புணர்வு பாடல், தருமபுரி மாவட்டத்தில் இன்று வெளியிடப்பட்டது. சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்தும் நோக்கில் உருவாக்கப்பட்ட இந்த பாடலை, தருமபுரி மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் கூட்டாக வெளியிட்டனர்.
பாடல் வரிகளை வழக்கறிஞரும் சமூக செயற்பாட்டாளருமான சுபாஷ் எழுதியுள்ளார். இசையமைத்து பாடியவர் பிரபுதாஸ். பாடல் வெளியீட்டு நிகழ்ச்சியில், ஸ்ரீ ஆண்டவர் ஸ்டில்ஸ் ஹனிபா, மகாலட்சுமி சில்க்ஸ் வெங்கடேஷ் பாபு, ஜேசிஐ ரவிக்குமார், எஸ்பிஐ விஜயகுமார், பாபு, ஆச்சி சிவா, பிரசன்னா, கணேஷ், இந்தியன் பில்லர் வினோத் உள்ளிட்டோர் பங்கேற்று விழிப்புணர்வுப் பாடலை வரவேற்றனர்.
மோட்டார் வாகன ஓட்டியவர்கள் ஹெல்மெட் அணிவது உள்ளிட்ட பாதுகாப்பு நடைமுறைகள் அவசியம் என்பதை வலியுறுத்தும் வகையில் இந்த பாடல் அமைந்துள்ளது. தர்மபுரி மாவட்டத்தில் “விபத்தில்லா சமூகத்தை” உருவாக்கும் முயற்சியில் இது ஓர் முக்கியமான படியாக அமைந்துள்ளது.