பாலக்கோடு, ஆடவை (ஆனி) 17 –
தருமபுரி மாவட்டம் பாலக்கோடு தாசில்தார் அலுவலகம் முன்பு, தமிழ்நாடு வருவாய் துறை அலுவலர் சங்கத்தின் சார்பில் “வருவாய்த்துறை தினம்” ஜூலை 1 அன்று சிறப்பாக கொண்டாடப்பட்டது. ஒவ்வொரு ஆண்டும் பசலி துவக்கம் நாளான ஜூலை 1ம் தேதி, வருவாய்துறையினர் தங்களது துறையை கௌரவிக்கும் விதமாக “வருவாய்த்துறை தினமாக” கொண்டாடி வருகின்றனர். இந்தாண்டும் அதேபோன்று, பாலக்கோடு தாசில்தார் அலுவலக வளாகத்தில் நிகழ்ச்சி நடைபெற்றது.
மாவட்ட துணை செயலாளர் சிங்காரவேலன் தலைமையில் நிகழ்ச்சி நடைபெற்றது. வட்ட தலைவர் செந்தில்குமார், வட்டச் செயலாளர் அருள்மணிகண்டன், முன்னாள் நிர்வாகிகள் எழில்மொழி, உமாபதி, சேரன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். தாசில்தார் ரஜினி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு வருவாய்த்துறை ஊழியர்களுக்கு வாழ்த்து தெரிவித்தார் மற்றும் துறையின் வளர்ச்சிக்கும் பொறுப்பும் பற்றும் பற்றிய உரையை வழங்கினார்.
நிகழ்ச்சியின் முடிவில் அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டன. வருவாய்த்துறையின் ஊழியர்கள், அலுவலர்கள், சங்க முன்னோடிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.