பொம்மிடி, ஜூலை 2:
பொம்மிடி நகரத்தில் நீண்ட காலமாகவே உழவர் சந்தை அமைக்க வேண்டும் என்ற பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் கோரிக்கைகள் வைத்தும், தற்போது வரை அரசு எந்த முடிவும் எடுக்காமல் புறக்கணித்து வருகிறது. நாம் தமிழர் கட்சி (NTK) சார்பாக கடந்த ஐந்து ஆண்டுகளாக இக்கோரிக்கையை பல்வேறு முறைகளில் அதிகாரிகள் மற்றும் மக்களுக்கு எடுத்துரைத்து வருகின்றனர். துறை அதிகாரிகளுக்கு மீண்டும் மீண்டும் மனுக்கள், கடிதங்கள் அனுப்பப்பட்டும், இடம் வசதி இல்லையென்றே அரசு தரப்பிலிருந்து மறுப்பு வருகின்றது.
தற்போது, விவசாயிகளின் நிலை மிகவும் மோசமாக உள்ளது, குறைந்த விலைக்கு தங்கள் விளை பொருட்களை விற்க வேண்டி இருப்பதால் பெரும் சிரமங்களை சந்திக்கின்றனர். உழவர் சந்தை இல்லாததால் விவசாயிகள், இடையிலான வர்த்தகர்களால் ஏமாற்றப்படுகிறார்கள். நாம் தமிழர் கட்சியின் கையூட்டு மற்றும் ஊழல் ஒழிப்பு பாசறை மாநில துணைத் தலைவர் திரு. ஜெபசிங்க் மற்றும் பாப்பிரெட்டிப்பட்டி தொகுதி பொறுப்பாளர்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகிறனர். விவசாயிகளின் உரிமைக்காக ஆட்சியரிடம் மனுக்கள், விவசாய அலுவலர்களிடம் சந்திப்பு, பத்திரிக்கை செய்திகள் மூலமாக பொதுமக்களுக்கு விழிப்புணர்வு என அனைத்து வழிகளிலும் சட்டப்படி நியாயமான முறையில் முயற்சி மேற்கொண்டு வருகின்றனர்.
பொம்மிடி பொதுமக்கள், விவசாயிகள், அனைத்து கட்சி சமூக இயக்கங்கள் இதற்காக ஆதரவு வழங்க வேண்டும் என்றும், மாவட்ட ஆட்சியர் உடனடியாக இடம் ஒதுக்கி உழவர் சந்தையை பொம்மிடியில் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் நாம் தமிழர் கட்சி வலியுறுத்தியுள்ளது