Type Here to Get Search Results !

மாவட்ட ஆட்சியர் செய்தி

அனுமதியற்ற மனைப்பிரிவுகள் வரன்முறைப்படுத்த ஆன்லைன் விண்ணப்ப பதிவு தொடக்கம்.

மாதிரி படம்.

தருமபுரி, ஜூலை 1 (ஆனி 16):

2025-2026ஆம் ஆண்டிற்கான சட்டப்பேரவை மானியக் கோரிக்கையின் போது, மாண்புமிகு வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் அவர்கள் அறிவிப்பு எண்.5-இல், “20.10.2016க்கு முன் அமைக்கப்பட்ட அனுமதியற்ற மனைப்பிரிவுகளில், அதற்கு முன் பதிவு செய்யப்பட்ட தனிமனைகளுக்கு எந்த காலக்கெடுவும் இல்லாமல் மனுக்கள் பெறப்பட்டு வரன்முறை செய்யப்படும்” என அறிவித்தார்.

இந்த அறிவிப்பின் அடிப்படையில், அவ்வாறு தனி மனையாக வாங்கிய பொதுமக்கள் பயனடையக்கூடிய வகையில், 01.07.2025 முதல் இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கும் செயல்முறை தொடங்கப்பட்டுள்ளது. அனுமதியற்ற மனைப்பிரிவுகளை வரன்முறைப்படுத்தும் திட்டத்தின் கீழ், 20.10.2016 அல்லது அதற்கு முன்னர் உருவாக்கப்பட்ட மனைப்பிரிவுகளுக்கான விண்ணப்பங்கள், ஏற்கனவே வெளியிடப்பட்ட அரசாணைகளில் குறிப்பிடப்பட்ட விதிகள் அவ்வாறே நீடிக்கப்படுவதாகவும், விண்ணப்பிக்க கால அவகாசம் 30.06.2026 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.


இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க விரும்பும் பொதுமக்கள், www.tcponline.tn.gov.in என்ற இணையதள முகவரியில் தங்களது விண்ணப்பங்களை 01.07.2025 முதல் பதிவு செய்யலாம். மேலும், மலையிடப் பகுதிகளில் அமைந்துள்ள அங்கீகரிக்கப்படாத மனைப்பிரிவுகளை வரன்முறைப்படுத்தவும் இதே இணையதளம் வாயிலாக 01.07.2025 முதல் 30.11.2025 வரை விண்ணப்பிக்கலாம் எனவும், இதற்கு முன்னர் பயன்படுத்தப்பட்ட www.tnhillarealayiutreg.in என்ற இணையதளத்தை மாற்றியமைக்கப்பட்டுள்ளது.


இத்திட்டம் தொடர்பான கூடுதல் விவரங்களுக்கு, மாவட்ட நகராட்சி அலுவலகங்கள் மற்றும் நகர மேம்பாட்டு அலுவலர்களை நேரில் தொடர்புகொள்ளலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. ரெ. சதீஸ், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார். 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies