தருமபுரி, ஜூலை 27 | ஆடி 11 -
தருமபுரி மாவட்டம், ரோட்டரி ஹாலில் மறுமலர்ச்சி ஜனதா கட்சியின் மாநில செயற்குழுக் கூட்டம் மாநிலத் தலைவர் மற்றும் கட்சியின் நிறுவனர் ச. ஜெயக்குமார் தலைமையில் வெகு சிறப்பாக நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாநில பொதுச் செயலாளர் ஆனந்த சுப்பிரமணியம், மாநில துணைத் தலைவர் சிவராஜ், மாநில பொருளாளர் அரங்கநாதன், மாவட்டச் செயலாளர் சுசீந்திரன், மாநில மகளிர் அணி செயலாளர் சுதா, மாநில அமைப்பு பொது செயலாளர் உள்ளிட்ட தலைவர்கள் கலந்துகொண்டு கருத்துரையாற்றினர்.
மேலும் மாவட்ட நிர்வாகிகள் தமிழ்செல்வன், வசந்த் பிரகாசம், ராஜேந்திரன், பார்தசாரதி, நவின், விவசாய அணி செயலாளர் சரவணன், அரூர் ஒன்றியத் தலைவர் சித்தர் உள்ளிட்டோர் பங்கேற்றனர். கூட்டத்தில் கிருஷ்ணகிரி, சேலம், ஈரோடு, நாமக்கல், திருவண்ணாமலை, திருப்பத்தூர், கோயம்புத்தூர், சென்னை, திருநெல்வேலி, தென்காசி, தேனி, தஞ்சாவூர், தூத்துக்குடி, விருதுநகர், கன்னியாகுமரி, மதுரை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த மாநில, மண்டல, மாவட்ட, நகர, ஒன்றிய கிளை பொறுப்பாளர்கள் கலந்துகொண்டனர்.
மொத்தமாக 500-க்கும் மேற்பட்டோர் இதில் கலந்து கொண்டு, கட்சியின் வளர்ச்சி, அரசியல் நிலைபாடு, உறுப்பினர் சேர்ப்பு மற்றும் எதிர்காலத் திட்டங்கள் குறித்து விவாதம் நடைபெற்றது.