தருமபுரி மாவட்டம், பென்னாகரம் வட்டத்தில் உள்ள ஒகேனக்கல் பகுதியில், காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்த மழையால், ஆற்றின் நீர்வரத்து படிப்படியாக அதிகரித்து வருகின்றது. இன்றைய மதியம் நிலவரப்படி, ஒகேனக்கல் காவிரி ஆற்றில் வினாடிக்கு 72,000 கனஅடி அளவில் நீர் திறக்கப்பட்டு வருவது பதிவாகியுள்ளது. இதனையடுத்து, மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. ரெ. சதீஸ், இ.ஆ.ப., அவர்கள் நேரில் கள ஆய்வு மேற்கொண்டு, நிலைமையை பார்வையிட்டார்.
அவருடன் நிர்வாக அதிகாரிகளும் கலந்து கொண்டு, பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்பாக ஆலோசனை நடத்தினர். மாவட்ட நிர்வாகத்தின் சார்பில், பொதுமக்கள் பாதுகாப்பு காரணமாக ஒகேனக்கலில் குளிப்பதற்கும், பரிசல் இயக்கத்திற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த தடை மறு உத்தரவு வரும் வரை தொடரும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.