அரூர், ஜூலை 27 | ஆடி 11 -
இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவரான மாண்புமிகு டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் அவர்களின் பத்தாம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு, தர்மபுரி மாவட்டம் அரூர் வட்டத்தில் உள்ள Little Drops முதியோர் இல்லத்தில் உணவுப்பொருட்கள் வழங்கும் நிகழ்வு இன்று நடைபெற்றது. இந்த நினைவு நிகழ்ச்சி, அனைத்திந்திய கலாம் கனவு அறக்கட்டளை சார்பில் சிறப்பாக நடத்தப்பட்டது. அறக்கட்டளையின் நிறுவனர் மற்றும் அறங்காவலர் திரு சென்னையன் அவர்களின் தலைமையில் நிகழ்வு தொடங்கப்பட்டது. இதில் முதியோர்களின் நலனை கருத்தில் கொண்டு பிஸ்கட் மற்றும் சிற்றுண்டிகள் வழங்கப்பட்டன.
இந்நிகழ்ச்சியில் மொரப்பூர் பைரவா பேக்கரியின் உரிமையாளர் திரு சுரேஷ், அறங்காவலர்கள் திரு சுப்பிரமணி, திரு கார்த்திகேயன் ஆகியோர் கலந்து கொண்டு பங்கேற்றனர். அனைவரும் கலாம் அவர்களின் சாதனைகள் மற்றும் அறிவியலின் வளர்ச்சிக்காக அவர் செய்த பங்களிப்புகள் குறித்து நினைவுகூர்ந்து அஞ்சலி செலுத்தினர். இந்நிகழ்வின் வழியாக, சமூக நலனுக்காக அர்ப்பணிப்பு உணர்வுடன் பணியாற்றிய கலாம் அவர்களின் கனவுகளை நிறைவேற்றும் நோக்கில் பல சமூக சேவைகள் தொடர்ந்தும் மேற்கொள்ளப்படும் என அறக்கட்டளை நிர்வாகிகள் தெரிவித்தனர்.