தருமபுரி மாவட்ட உதவி செயற்பொறியாளர் (சா.ம.பா), தருமபுரி மற்றும் மொரப்பூர் உபகோட்ட அலுவலக பயன்பாட்டிலிருந்ததாகும், தற்போது கழிவுநீக்கம் (Scrapping) செய்யப்பட்ட Tata Spacio (TN 29 G 0470) மற்றும் Bolero Lx (TN 29 G 0472) என்ற இரண்டு வாகனங்கள் வரும் ஜூலை 18ஆம் தேதி பிற்பகல் 12.00 மணிக்கு தருமபுரி மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வளர்ச்சி பிரிவு) அலுவலகத்தில் பொது ஏலத்தில் விடப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஏலத்தில் கலந்து கொள்ள விரும்பும் பொதுமக்கள் மற்றும் வர்த்தகர்கள், அதே நாளான 18.07.2025 காலை 10.00 மணி முதல் 12.00 மணி வரை ரூ.5000/- வீதம் ரொக்கமாக செலுத்தி பதிவு செய்து, ஏலத்தில் பங்கேற்கலாம். மேலும் ஏலம் தொடர்பான கூடுதல் தகவல்களுக்கு, அலுவலக வேலை நாட்களில் தருமபுரி மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வளர்ச்சி பிரிவு) அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.