தருமபுரி, ஜூலை 30 | ஆடி 14 -
தருமபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலக வளாகத்தில் இன்று (30.07.2025) காலை 10.00 மணி முதல் பிற்பகல் 2.00 மணி வரை பொதுமக்களுக்காக குறைதீர்க்கும் முகாம் (பெட்டிஷன் மேளா) நடைபெற்றது. இந்த முகாமிற்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு S.S. மகேஸ்வரன், B.Com., B.L., அவர்கள் தலைமையகத்தில் இருந்து நேரில் வந்து தலைமையேற்றார்.
இம்முகாமில் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு N. பாலசுப்ரமணியன், பெண்கள் மற்றும் குழந்தைகள் குற்ற தடுப்பு பிரிவு காவல் கண்காணிப்பாளர் திரு K. ஸ்ரீதரன் ஆகியோரும், பல்வேறு காவல் ஆய்வாளர்கள் மற்றும் உதவி ஆய்வாளர்களும் கலந்து கொண்டனர். இந்த முகாமில் மொத்தம் 81 மனுக்கள் குறித்து நேரடியாக விசாரணை செய்யப்பட்டு, அனைத்துக்கும் தீர்வு காணப்பட்டதாக காவல்துறை தெரிவித்தது. மேலும், இன்றைய முகாமில் புதிதாக 46 மனுக்கள் கிடைத்துள்ளன.