தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாவட்ட அளவிலான ஹாக்கி போட்டி சிறப்பாக நடைபெற்றது. இந்த போட்டியை பாலக்கோடு காவல் ஆய்வாளர் பாலசுந்தரம் துவக்கி வைத்தார். முதன்மை அமைப்பாளராக முன்னாள் உடற்கல்வி ஆசிரியர் ரங்கநாதன் முன்னிலை வகித்தார். பள்ளி கல்வித்துறை சார்பில் நடைபெற்ற இப்போட்டியில், மாவட்டத்தை சேர்ந்த அரசு மற்றும் தனியார் பள்ளிகளிலிருந்து பாலக்கோடு, நரிப்பள்ளி, அரூர், பாப்பிரெட்டிபட்டி, பென்னாகரம், பேக்கர்அள்ளி, வெங்கட்டம்பட்டி ஆகிய 7 அணிகள் பங்கேற்றன.
முதல் மூன்று இடங்களை பெற்ற அணிகள், எதிர்வரும் மண்டல அளவிலான ஹாக்கி போட்டியில் மாவட்டத்தை பிரதிநிதிக்கவுள்ளனர். இந்நிகழ்வின் முடிவில், வெற்றி பெற்ற அணிகளுக்கு சான்றிதழ்கள் மற்றும் கோப்பைகள் வழங்கி பாராட்டினர். போட்டியின் நடுவர்களாகவும் ஒருங்கிணைப்பாளர்களாகவும் ஹாக்கி யூனிட் செயலாளர் குமார், பொருளாளர் முனியப்பன், இணை செயலாளர் குமார், உடற்கல்வி ஆசிரியர்கள் வெங்கடோன், ரவி, ரமேஷ், இளவரசன், பச்சியப்பன், உடற்கல்வி இயக்குநர்கள் மதேஷ், அறிவழகன், செந்தில், இளையராஜா, குமார், குமரன் ஆகியோர் பங்கேற்று நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.