தருமபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலக வளாகத்தில் இன்று காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை பொதுமக்களின் குறைதீர்க்கும் முகாம் (பெட்டிஷன் மேளா) சிறப்பாக நடைபெற்றது. இந்த முகாமுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. S.S. மகேஸ்வரன் B.Com., B.L., தலைமையினில் நடத்தப்பட்டது.
மேளாவில் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் (பெண்கள் மற்றும் குழந்தைகள் குற்றத் தடுப்பு பிரிவு) திரு. K. ஸ்ரீதரன், காவல் ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு வழக்குகளை நேரில் கண்காணித்தனர். பொதுமக்களிடம் இருந்து முன்பு பெறப்பட்ட 70 மனுக்கள் மீதும் விசாரணை மேற்கொடுக்கப்பட்டு, அனைத்துக்கும் தீர்வு வழங்கப்பட்டது. இதற்குப் பிறகு இன்று மட்டும் புதியதாக மேலும் 45 மனுக்கள் பெறப்பட்டன.
பொதுமக்கள் நேரில் வந்து தங்கள் புகார்களை பதிவு செய்த இந்த முகாம், காவல் துறை மற்றும் பொதுமக்களுக்கிடையே நெருங்கிய ஒத்துழைப்பை உருவாக்கும் வகையில் நடைபெற்றது என பொது மக்களும் அதிகாரிகளும் தெரிவித்தனர்.