அரூர், ஜூலை 4 (ஆனி 19):
தருமபுரி மாவட்டம், அரூர் சட்டமன்றத் தொகுதி, நகர வாக்குசாவடி எண் 217-ல் “ஓரணியில் தமிழ்நாடு” உறுப்பினர் சேர்க்கை திட்டம் தி.மு.க சார்பில் நாளில் நடைபெற்றது. தமிழ்நாட்டின் உரிமைகள் காக்கவும், மாநில சுயாட்சியை மீட்டெடுக்கவும், திமுக மீண்டும் ஆட்சி பொறுப்பேற்கும் வகையில், மாண்புமிகு முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களின் ஆணையின்படி, மேற்கு மாவட்ட செயலாளர் முனைவர் பி. பழனியப்பன் ஆலோசனையிலும் நிகழ்வு முன்னெடுக்கப்பட்டது. அரூர் நகர் செயலாளர் முல்லைரவி தலைமையில், தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் கு.தமிழழகன் முன்னிலையில் வீடுவீடாக சென்று திராவிட மாடல் அரசின் சாதனைகள் மக்களுக்கு விளக்கப்பட்டு, ஸ்டாலின் செயலி மூலம் உறுப்பினர் சேர்க்கை செய்யப்பட்டது. நிகழ்வில் நகர துணைச் செயலாளர் செல்வதயாளன், தொகுதி ஐ.டி.விங் ஒருங்கிணைப்பாளர் பி.ரியங்கா, மகளிர் அணி அமைப்பாளர் அருள்மொழி, கழக நிர்வாகிகள் ரவி, சுதாகர், விமல், காஞ்சனா, வினோதினி மற்றும் பீ.எல்.ஏ., பி.டி.ஏ. பணி தாங்கியோர் பங்கேற்றனர்.