இதில், சில வாகன ஓட்டிகள் கூட உடந்தையாக இருப்பதாகவும், இதனால் வாகன உரிமையாளர்கள் பெரும் இழப்பை சந்தித்து வருவதாகவும் கூறப்படுகிறது. குறிப்பாக, இந்த கலப்பட டீசலை பயன்படுத்தும் வாகனங்களின் என்ஜின் விரைவில் பழுதாகி வருகிறது. இந்நிலையில், பாதிக்கப்பட்ட வாகன உரிமையாளர்கள் பாலக்கோடு டிஎஸ்பி மனோகரனிடம் புகார் அளித்தனர். அதன்பேரில், டிஎஸ்பியின் உத்தரவின்படி, காரிமங்கலம் போலீசார் இன்று ஞாயிற்றுக்கிழமை மதியம் காரிமங்கலம் நெடுஞ்சாலையில் தீவிர சோதனை மேற்கொண்டனர்.
அப்போது, கெரகோடஅள்ளி பாலம் அருகே, சட்டவிரோதமாக டீசல் விற்பனை செய்த நபரை பிடித்து விசாரித்ததில், அவர் கீழ்சவுளுப்பட்டி சேர்ந்த சக்திவேல் (47) என்பதும், கள்ளமாக டீசல் விற்பனை செய்ததும் தெரியவந்தது. இதையடுத்து அவரை கைது செய்த போலீசார், அவரிடமிருந்து 20 லிட்டர் டீசலை பறிமுதல் செய்தனர். இச்சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டு, தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.