தருமபுரி, ஜூலை 7 (ஆனி 23) –
கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சியின் (கொமதேக) தருமபுரி கிழக்கு மாவட்ட செயற்குழு கூட்டத்தில், திரு. ஜி.கே(எ) பி.ஆர். கோகுலகிருஷ்ணன் என்பவர் தருமபுரி கிழக்கு மாவட்ட செய்தி மற்றும் விளம்பரத் துறை செயலாளராக நியமிக்கப்பட்டார். இந்த நியமனம் தொடர்பான தீர்மானம் மாவட்ட செயற்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டு, கொங்கு நாட்டு மக்களுக்கு சேவை செய்யும் உயரிய நோக்கத்தில் பணி செய்யும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
இந்நியமனத்திற்கு ஊக்கம், ஆதரவு, அங்கீகாரம் அளித்தமைக்காக, மாநில பொதுச் செயலாளர் மற்றும் திருச்செங்கோடு சட்டமன்ற உறுப்பினர் ஈ.ஆர். ஈஸ்வரன், மாநில கொள்கைப் பரப்பு செயலாளர் மற்றும் தருமபுரி-கிருஷ்ணகிரி மக்களின் ஜி. அசோகன், மாநில செயற்குழு உறுப்பினர் கே. செந்தில் முருகன், தருமபுரி கிழக்கு மாவட்ட செயலாளர் கே.பி. இளங்கோ, மாவட்ட அவைத் தலைவர் பி.எம். இளங்கோ, ஒன்றிய நகர செயலாளர்கள் ஜி.பி. வெங்கடேசன், கே. பார்த்திபன், எம். முகிலன், பெருமாள் மற்றும் அனைத்து மாவட்ட, நகர, கிளை, பஞ்சாயத்து பொறுப்பாளர்கள், சமூக வலைதள நண்பர்கள் ஆகிய அனைவருக்கும் திரு. கோகுலகிருஷ்ணன் அவர்கள் தனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொண்டுள்ளார்.