அரூர், ஜூலை 19 | ஆடி 03 -
திருவண்ணாமலை மாவட்டம் அரூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 2025–26ஆம் ஆண்டுக்கான நாட்டு நலப்பணி திட்டம் (NSS) துவக்க விழா இன்று சிறப்பாக நடைபெற்றது. இந்த விழாவில் புதிய மாணவர்கள் திட்டத்தில் இணைக்கப்பட்டதுடன், புதிய நிர்வாகிகளும் தேர்வு செய்யப்பட்டனர். விழாவுக்கு தலைமை ஆசிரியர் தலைமையிலாக, பள்ளி வளாகம் முழுவதும் சமூக சேவையாக தூய்மை பணிகள் மேற்கொள்ளப்பட்டன. குறிப்பாக விளையாட்டு அரங்கம் முழுவதுமாக சுத்தம் செய்யப்பட்டது.
விழா ஏற்பாடுகளை திட்ட ஒருங்கிணைப்பாளர் திரு. கதிரேசன், முதுகலை ஆசிரியர் திரு. சக்திவேல் பாவாசா, உடற்கல்வி ஆசிரியர்கள் திரு. பழனிதுரை, திரு. முருகேசன், மற்றும் திரு. பழனி கரை ஆகியோர் இணைந்து சிறப்பாக செய்திருந்தனர். நாட்டு நலப்பணி திட்ட முகாமின் தொடக்கமாக மாணவர்களிடமிருந்து சமூக சேவையின் மீதான உறுதிமொழி பெறப்பட்டது. நிகழ்ச்சி நிறைவில் உடற்கல்வி ஆசிரியர் திரு. பழனிதுரை நன்றி கூறி விழாவை முடித்தார்.