.jpg)
image source : google.com
தருமபுரி, ஜூலை 11 (ஆனி 27) -
.jpg)
தருமபுரி மாவட்டத்தில் சாலை விபத்துகளை தடுக்கும் முயற்சியாக, மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறையின் சார்பில் பல்வேறு விழிப்புணர்வு மற்றும் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த நடவடிக்கையின் ஒரு பகுதியாக, தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்குள் இருசக்கர வாகனத்தில் வருபவர்கள் கட்டாயமாக தலைக்கவசம் அணிய வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் திரு. சதீஸ் அவர்கள் அறிவுறுத்தியுள்ளார். இதற்கான விழிப்புணர்வாக அலுவலக நுழைவாயிலில் பல பதாதைகள் வைக்கப்பட்டுள்ளன.
இவ்விதி அரசு ஊழியர்கள், அலுவலக பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவருக்கும் பொருந்தும் என்றும், மீறுபவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று (11.07.2025) காலை, கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தவர்களில் சிலர் தலைக்கவசம் அணியாமல் வந்ததால், காவல்துறையினர் அவர்களிடம் அபராதம் வசூலித்தனர். இதனால் சில அரசு ஊழியர்கள் காவல்துறையினரிடம் வாக்குவாதத்திலும் ஈடுபட்டனர்.
இந்நடவடிக்கைகள், சாலை பாதுகாப்பை வலுப்படுத்தவும், தலைக்கவசம் அணிதல் கடைபிடிக்கப்படுவதை உறுதி செய்யவும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.