கடத்தூர், ஜூலை 17 | ஆடி 01 -
பாப்பிரெட்டிப்பட்டி வட்டம், கடத்தூர் மீனாட்சி மஹாலில் நடைபெற்ற “உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாமில், 23 பயனாளிகளுக்கு திருமண நிதியுதவித் திட்டத்தின் கீழ் ₹12.84 லட்சம் மதிப்பிலான தங்கத் தாலிகள் வழங்கப்பட்டன. முகாமில் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. ரெ. சதீஸ் மற்றும் தருமபுரி மக்களவை உறுப்பினர் திரு. ஆ.மணி ஆகியோர் பங்கேற்றனர். மக்கள், திட்டத்திற்காக முன்பதிவு செய்திருந்ததுடன், இதில் கலந்துகொண்டு தங்களது நலத் திட்டங்களை பெற்றனர்.
அரசுத் திட்டங்களை பொதுமக்களுக்கு நேரடியாக கொண்டு சேர்ப்பதே நோக்கமாகக் கொண்ட இந்த முகாமில், மகளிர் வளர்ச்சி துறை, வேலைவாய்ப்பு அலுவலகம், வருவாய் துறை உள்ளிட்ட துறை அலுவலர்கள் ஒருங்கிணைந்து செயல்பட்டனர்.