அரூர், ஜூலை 17 | ஆடி 01 -
அரூர் வட்டம், பெ.தாதம்பட்டி ஊராட்சியில் நடைபெற்ற “உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாமில், முதல்வரின் மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தில் பயனாளிக்கு உடனடி சான்றிதழ் வழங்கப்பட்டது. மேலும் தாட்கோ நன்னிலம் மகளிர் நில உடைமை திட்டத்தின் கீழ், வாச்சாத்தியைச் சேர்ந்த திருமதி சத்யா என்பவருக்கு, நிலம் விற்பனை செய்த திரு. கண்ணன் அவரிடம் இருந்து ₹5 லட்சம் மதிப்பிலான காசோலை வழங்கப்பட்டது.
முகாமில் சமூக நலத்துறை, வருவாய், வனத்துறை, விவசாயம் உள்ளிட்ட துறை அலுவலர்கள் பங்கேற்றனர். பொதுமக்கள் பெருமளவில் பங்கேற்று தங்கள் பிரச்சனைகளை தெரிவித்து தீர்வு பெற்றனர்.