தருமபுரி, ஜூலை 28 | ஆடி 12 -
பள்ளிபுத்தாக்கம் மேம்பாட்டு திட்டம் SIDP 3.0 ல் மாநில அளவில் நடைபெற்ற போட்டிகளில், தருமபுரி மாவட்டத்தைச் சேர்ந்த பேகாரஹள்ளி அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் மூன்றாம் இடத்தை பெற்று சிறப்பான வெற்றியைப் பெற்றனர். இந்த சாதனையை மதிப்பளித்து, மாணவர்களுக்கு ரூ.25,000 காசோலை மற்றும் பாராட்டு சான்றிதழ் மாவட்ட ஆட்சித் தலைவர் வழங்கினார். மாணவர்கள் வெற்றி பெற்றதற்காக சிறப்பாக பாராட்டபட்டனர்.
இந்த நிகழ்வில் முதன்மை கல்வி அலுவலர், தொழில் முனைவோர் மேம்பாட்டு துறை மாவட்ட திட்ட மேலாளர், மாவட்ட சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்பாளர், பள்ளி தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் என பலரும் கலந்துகொண்டு மாணவர்களுக்கு உற்சாகம் வழங்கினர். மாணவர்களின் இந்த வெற்றி, அரசு பள்ளிகளில் கல்வித் தரம் உயர்ந்து வருவதையும், பள்ளி புதுமை திட்டங்கள் மாணவர்களுக்கு திறமையை வெளிப்படுத்தும் அரிய வாய்ப்புகளை வழங்குகின்றன என்பதையும் உறுதிப்படுத்துகிறது.