தருமபுரி, ஜூலை 2 (ஆனி 18):
தருமபுரி மாவட்டம் மற்றும் தருமபுரி வருவாய் கோட்டத்திற்குட்பட்ட வட்டங்களைச் சேர்ந்த விவசாயிகளின் குறைகளை நேரில் கேட்டறிந்து தீர்க்கும் வகையில், ஒவ்வொரு மாதமும் முதல் வாரம் வெள்ளிக்கிழமை நடைபெறும் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், ஜூலை மாதத்திற்கான கூட்டமாக 04.07.2025 அன்று காலை 11.00 மணிக்கு நடைபெறவுள்ளது.
இந்த கூட்டம், தருமபுரி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில், வருவாய் கோட்ட அலுவலர் திருமதி ரா. காயத்ரி அவர்கள் தலைமையில் நடத்தப்பட உள்ளது. விவசாயிகளின் மண், நீர், மின் இணைப்பு, பாசன வசதிகள், நிலம் தொடர்பான பதிவுகள், மக்கள்வழக்குகள், நஷ்டஈடு உள்ளிட்ட பிரச்சனைகள் குறித்து நேரில் தெரிவித்து தீர்வு காணக்கூடிய இந்த கூட்டத்தில், சம்பந்தப்பட்ட அரசுத் துறை அலுவலர்கள், விவசாயிகள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் தவறாமல் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. இது குறித்து, தருமபுரி வருவாய் கோட்ட அலுவலர் திருமதி. ரா. காயத்ரி அவர்கள் தெரிவித்தார்.