தருமபுரி, ஜூலை 6 (ஆனி 22, சுபகிருது) –
தருமபுரி நகர திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில், “ஒரணியில் தமிழ்நாடு” திட்டத்தின் கீழ் உறுப்பினர் சேர்க்கை முகாம் நகரச் செயலாளர் நாட்டான் மாது தலைமையில் நாட்டாமைபுரத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில், திமுக அரசின் நான்காண்டு சாதனைகளை வீடு வீடாக சென்று மக்களுக்கு எடுத்துரைக்கும் பணியில், திமுக கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் ஆ.மணி எம்.பி, மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணியின் ஒருங்கிணைப்பாளர் உதயசூரியன், தொகுதி பார்வையாளர் டி.செங்குட்டுவன் ஆகியோர் பங்கேற்று உறுப்பினர் சேர்க்கை நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
முகாமில் முன்னாள் மாவட்டச் செயலாளர் தடங்கம் சுப்பிரமணி, மாவட்ட பொருளாளர் தங்கமணி, மாவட்ட துணைச் செயலாளர் ரேணுகாதேவி, சிறுபான்மையினர் பிரிவு அமைப்பாளர் ரஹிம், நகர துணைச் செயலாளர் முல்லவேந்தன், ஓட்டுனர் அணி விஜயன், வெல்டிங் ராஜா, கனகராஜ், காசிநாதன், மோகன், மாதேஷ், அழகு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.