தருமபுரி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில், 2025-26-ஆம் ஆண்டிற்கான மாவட்ட வழங்கல் மற்றும் விற்பனை சங்கத்தின் மூலம் மூன்று நாள் “கல்லூரி சந்தை” நிகழ்ச்சி (08.07.2025 முதல் 10.07.2025 வரை) இன்று மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. ரெ. சதீஷ், இ.ஆ.ப. அவர்கள் துவக்கி வைத்தார்.
இந்த சந்தையில் மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்கள் தயாரித்த உணவுப் பொருட்கள், மரசெக்கு எண்ணெய்கள், செயற்கை ஆபரணங்கள், சணல் பைகள், புடவைகள், சத்துமாவு, பாப்கான், மசாலா பொடி, சுண்டக்காய் வத்தல் உள்ளிட்ட பல உற்பத்திகள் விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ளன. மாவட்ட ஆட்சித்தலைவர், இத்தகைய உற்பத்திகளை Amazon, Flipkart, Meesho மற்றும் Instagram, Facebook, WhatsApp போன்ற சமூக வலைதளங்கள் மூலமாக விற்பனை செய்யுமாறு ஆலோசனை வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் மகளிர் திட்ட இயக்குநர் அ.லலிதா, முன்னோடி வங்கி மேலாளர் ராமஜெயம், இந்தியன் வங்கி சுய வேலைவாய்ப்பு பயிற்சி இயக்குநர் கௌரி, மற்றும் பலர் கலந்து கொண்டனர்.