Image Source : Google.com
தருமபுரி, ஜூலை 14 (ஆனி 30) -
நாட்டின் முன்னணி சமையல் எரிவாயு சேவை நிறுவனங்களான இந்தியன் ஆயில், எச்.பி., பரத் பெட்ரோலியம் ஆகிய நிறுவனங்களின் முகவர்கள் ஊரக மற்றும் நகர பகுதிகளில் சிலிண்டர் விநியோகச் சேவையை மேற்கொண்டு வருகின்றனர். ஆனால், சமீப காலமாக சிலிண்டர் விநியோகிக்கும் பணியாளர்கள், வாடிக்கையாளர்களிடம் ரூ.20 முதல் ரூ.100 வரை கட்டாய வசூல் செய்து வருவதாக பல பகுதிகளில் பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
பொதுமக்கள் கூறுவதாவது, அவர்கள் ஆன்லைன் மூலமாக முன்பே தொகை செலுத்தியிருந்தாலும், சிலிண்டர் கொண்டு வரும் பணியாளர், “இது தான் எங்களுக்கான சம்பளம், முகவர்கள் எதுவும் தருவதில்லை” என்று கூறி கட்டாயமாக பணம் வசூலிக்கின்றனர். மேலும், சில ஊர்களில் பிரதான சாலையில் சிலிண்டரை இறக்கிவிட்டு, “வீடுவரை கொண்டு வர முடியாது” என வாக்குவாதம் செய்து, பொதுமக்களை கடுமையாக அவதிப்படுத்தும் நிலை உருவாகியுள்ளது.
இதனால், அரசு ஆதரவு பெற்ற எரிவாயு நிறுவனங்கள் மக்களின் நலனை கருத்தில் கொண்டு, முகவர்கள் மற்றும் விநியோக பணியாளர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்க மாவட்ட நிர்வாகம் மற்றும் பெட்ரோலிய நிறுவனங்கள் உடனடியாக தலையிட வேண்டும் எனக் பொதுமக்களும்ம் சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
🛑 புகார் பதிவு செய்ய தொடர்புகொள்ள வேண்டிய எண்கள்:
-
இந்தியன் ஆயில்: 📞 1800-2333-555
-
எச்.பி. (HP GAS): 📞 1800-2333-555
-
பரத் பெட்ரோலியம் (Bharat Gas): 📞 1800-224-344
அல்லது 1906 அனைத்து நிறுவனங்களின் பொது எண்.
(இந்த எண்கள் 24 மணி நேரம் இலவசமாக செயல்படும் தொலைபேசி சேவைகள் ஆகும்.)