பாலக்கோடு, ஜூலை 20 | ஆடி 04 -
தருமபுரி மாவட்டம், பாலக்கோடு ஒன்றியத்துக்குட்பட்ட எர்ரனஅள்ளி ஊராட்சியில், பொதுமக்கள் பேருந்திற்காக காத்திருக்க பயன்படுத்தும் பேருந்து நிழற்கூடம் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது. தற்போது அது முற்றிலும் பழுதடைந்து, இடிந்து விழும் அபாயகரமான நிலையில் உள்ளது.
மேற்கூரை விரிசலடைந்து, சிமெண்டு சில்லுகள் அடிக்கடி கீழே விழும் நிலை காணப்படுவதால், அப்பகுதியில் காத்திருக்கும் பயணிகள் இடிபாடுகளால் பாதிக்கப்படும் அபாயம் உருவாகியுள்ளது. இதுவரை பெரும் விபத்து ஏதும் ஏற்படவில்லை என்றாலும், மழைக்காலம் தொடங்க உள்ள நிலையில், அந்த இடத்தில் பயணிகள் நிழலில் நிற்கும் சூழ்நிலை, பாதுகாப்பற்ற சூழலை உருவாக்குகிறது.
இந்த நிழற்கூடத்தை முழுமையாக அகற்றி, புதியதாக கட்ட வேண்டும் என்பதற்கான கோரிக்கைகள் பொதுமக்கள் சார்பில் நீண்ட காலமாக முன்வைக்கப்பட்டுள்ளன. இருப்பினும் அதிகாரிகள் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என மக்களது குற்றச்சாட்டாகவும், வேறு விகிதமான இடங்களில் வளர்ச்சிப் பணிகள் நடைபெறுவது போல, இங்கேயும் குறைந்தபட்ச வசதிகளை உருவாக்க வேண்டும் என்பது பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.
மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுத்து, பயணிகள் பாதுகாப்பிற்காக புதிய நிழற்கூடம் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
.gif)

.jpg)