பாலக்கோடு, ஜூலை 15 (ஆனி 31) -
தருமபுரி மாவட்டம் பாலக்கோடு சர்க்கரை ஆலை முன்பு, பாரதிய ஜனதா கட்சி (பாஜக) சார்பில், முன்னாள் தமிழக முதல்வரும் கல்விச்சாதனையாளருமான கர்மவீரர் காமராஜரின் 123வது பிறந்த நாள் விழா சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. இந்த விழாவுக்கு, மத்திய நலத்திட்ட பிரிவு மாவட்ட துணைத் தலைவர் பி.கே.சிவா தலைமையிலான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
நகர தலைவர் கணேசன், நகர பொருளாளர் முனியப்பன், பொருளாதார பிரிவு மாவட்ட செயலாளர் சின்னவன், நகர பொதுச் செயலாளர் ஜெய்கணேஷ், நகர செயலாளர்கள் நந்தகிரி, ராஜாராம், மாவட்ட செயற்குழு உறுப்பினர் கிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்வின் ஒரு பகுதியாக, பாலக்கோடு சர்க்கரை ஆலை முன்புள்ள கர்மவீரர் காமராஜரின் திருஉருவ சிலைக்கு, பி.கே.சிவா அவர்கள் மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் பாஜகவினர் ஒருங்கிணைந்து மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
விழாவைத் தொடர்ந்து, பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன. இதில், பாஜக நிர்வாகிகள் அழகுபெருமாள், சண்முகம், மாதேஷ், ராமர், சரவணன் உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் திரளாகக் கலந்து கொண்டு கர்மவீரருக்கு மரியாதை செலுத்தினர்.