Type Here to Get Search Results !

மாவட்ட ஆட்சியர் செய்தி

காரிமங்கலம் சோதனை சாவடியில் அதிரடி சோதனை – 3 சொகுசு கார்களில் 7 லட்சம் ரூபாய் மதிப்பிலான குட்கா பறிமுதல்.


பாலக்கோடு, ஆடவை (ஆனி) 17 –

தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் அருகே கும்பாரஅள்ளி சோதனை சாவடியில் போலீசார் நடத்திய அதிரடி சோதனையில், மூன்று சொகுசு கார்களில் கடத்தி வரப்பட்ட, தமிழ்நாடு அரசால் தடைசெய்யப்பட்ட ரூ.7 லட்சம் மதிப்பிலான 3 டன் குட்கா பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. பாலக்கோடு டி.எஸ்.பி. மனோகரனுக்கு கிடைத்த இரகசிய தகவலின் பேரில், காரிமங்கலம் இன்ஸ்பெக்டர் பார்த்திபன், துணை ஆய்வாளர்கள் சுந்தரமூர்த்தி மற்றும் ஆனந்தகுமார் ஆகியோர் சோதனையில் ஈடுபட்டனர்.

விடியற்காலை அவ்வழியாக வந்த 3 சொகுசு கார்கள் போலீசாரின் தடுக்குறிப்பை பொருட்படுத்தாமல் பயங்கரவாக செல்ல முயன்றன. இதையடுத்து போலீசார் வாகனங்களை துரத்தினர். துரத்தும் நிலையறிந்து, ஓட்டுநர்கள் கார்களை சாலையோரம் நிறுத்தி தப்பிச் சென்றனர். பின்னர் போலீசார் கார்களை பறிமுதல் செய்து சோதனையிட்டபோது, அதில் 100-க்கும் மேற்பட்ட மூட்டைகளில் 3 டன் அளவுக்கு தடைசெய்யப்பட்ட குட்கா பொருட்கள் இருந்தது தெரியவந்தது.


இதோடு, சுமார் ரூ.15 லட்சம் மதிப்புடைய சொகுசு கார்களும் பறிமுதல் செய்யப்பட்டது. சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கடத்தல் தொடர்புடையவர்கள் யாரென்பதை உறுதி செய்யும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies