பாப்பாரப்பட்டி , ஜூலை 11 (ஆனி 27) -
தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே பாடி பஞ்சாயத்துக்கு உட்பட்ட எரப்பட்டி பகுதியைச் சேர்ந்த சுப்பிரமணி மகன் சண்முகம் வயது(35) கட்டிட மேஸ்திரியாக தொழில் செய்து வருகிறார்.இவருக்கு ஒரு பெண் குழந்தையும் ஒரு ஆண் குழந்தையும் உள்ளன. இந்த நிலையில் இவர் பிக்கிலில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு எட்டியம் பட்டி சாலை வழியாக சென்றுள்ளார்.அப்பொழுது பனைகுளம் பகுதியில் இருந்து செங்கல் ஏற்றி தருமபுரி நோக்கி வந்த மினி லாரி எதிரே வந்த இரு சக்கர வாகனம் மீது மோதியது மோதியதில் சம்பவ இடத்திலேயே இரு சக்கர வாகனத்தில் வந்த வாலிபரை தூக்கி வீசப்பட்டு பரிதாபமாக உயிரிழந்தார்.
இதனை கண்ட அக்கம் பக்கத்தினர் பாப்பாரப்பட்டி காவல்துறையினருக்கு தகவல் அளித்தனர். தகவலின் பெயரில் விரைந்து வந்த காவல்துறையினர் சடலத்தை கைப்பற்றி உடல் கூறு ஆய்வுக்காக தருமபுரி அரசு தலைமை மருத்துவக் கல்லூரிக்கு அனுப்பி வைத்தனர்.இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.