பாலக்கோடு, ஜூலை 4 – ஆனி 19:
தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு வட்டம் ஜிட்டாண்டஅள்ளி திமுக மேற்கு ஒன்றிய அலுவலகத்தில், “ஓரணியில் தமிழ்நாடு” திட்டத்தின் கீழ் உறுப்பினர் சேர்க்கை செயலி பயிற்சி முகாம் நடைபெற்றது. இம்முகாமில் மேற்கு ஒன்றிய செயலாளர் வக்கில் எம்.வி.டி. கோபால் தலைமையிலான பல்வேறு நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
தொகுதி ஒருங்கிணைப்பாளர் பரணி, செயலியின் பயன்பாடு, புதிய உறுப்பினர் சேர்க்கை மற்றும் குடும்ப உறுப்பினர்களின் இணைப்பு உள்ளிட்ட அம்சங்களை நிர்வாகிகளுக்கு விளக்கினார். இதில், மக்களுடன் நேரடி தொடர்பு கொண்டு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் சாதனைகள் குறித்து எடுத்துரைத்தும், ஸ்டாலின் செயலி வழியாக உறுப்பினர் சேர்க்கை பணியில் தீவிரம் காட்ட வேண்டும் என வக்கில் கோபால் வலியுறுத்தினார்.
இந்நிகழ்ச்சியில் தொகுதி பொறுப்பாளர் அரியப்பன், விவசாய அணி மாநில துணைச் செயலாளர் சுப்ரமணி, மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் ஹரிபிரசாத், ஒருங்கிணைப்பாளர்கள் ஏ.வி.குமார், முனிரத்தினம், முன்னாள் ஒன்றிய அவைத் தலைவர் முனுசாமி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.