தருமபுரி, ஆடவை (ஆனி) 05-
தருமபுரி மாவட்ட வருவாய் அலகில் வருவாய்த் துறையைச் சேர்ந்த உதவி ஆணையர் (ஆயம்) பயன்பாட்டில் இருந்த அரசு வாகனம் பழுதடைந்த நிலையில் உள்ளது. TME 9582 என்ற பதிவெண் கொண்ட இவ்வீப்பு வாகனம் தற்பொழுது முற்றிலும் பயன்பாடற்ற நிலையில் இருப்பதால், அதை கழிவு என வகைப்படுத்தி ஏலம் விட தீர்மானிக்கப்பட்டுள்ளது.
மேற்கண்ட வாகனம் ₹10,100/- என்ற ஆரம்ப ஏலத் தொகையுடன், ஆடவை (ஆனி) 13 (27.06.2025) அன்று காலை 11.00 மணிக்கு, தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் ஏலம் விட உத்தேசிக்கப்பட்டுள்ளது. ஏலத்தில் கலந்து கொள்ள விருப்பமுள்ளவர்கள் அதற்கேற்ப நேரில் வருகை தரி ஏலத்தில் பங்கேற்று விலைப்புள்ளியை வழங்கலாம் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இது குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. ரெ.சதீஸ், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்ததாவது, அரசு உடமையான பொருட்கள் நிர்வாகச் செலவுகளை குறைக்கும் வகையில் முறையாக மேம்படுத்தப்படாத நிலையில் இருக்கும்போது இவ்வாறு ஏலத்தினூடாக விற்பனை செய்யப்படுகின்றன. இதன் மூலம் அரசுக்குத் தேவையான வருவாயும் ஈட்டப்படுகிறது என்றும் தெரிவித்தார்.