Type Here to Get Search Results !

தருமபுரி அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் சேர்க்கை அறிவிப்பு.


தருமபுரி, ஜூன் 19-

தருமபுரி அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் ஆகஸ்ட் மாதம் தொடங்கவுள்ள கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கை ஜூன் 19ஆம் தேதி முதல் நேரடியாக நடைபெற உள்ளது. அரசு மற்றும் தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களில் உள்ள பல்வேறு தொழிற்பிரிவுகளில் சேர்வதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.


விண்ணப்பிக்க விரும்பும் ஆண்கள் 14 முதல் 40 வயது வரை தகுதியுடையவர்களாக இருக்க வேண்டும். பெண்களுக்கு குறைந்தபட்ச வயது 14 ஆகும்; ஆனால் உயர் வயது வரம்பு இல்லை. 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் கம்பியாள் (Wireman – 2 வருடம்), பற்றவைப்பவர் (Welder – 1 வருடம்) போன்ற பிரிவுகளுக்கு விண்ணப்பிக்கலாம். 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் கோபா (Computer Operator & Programming Assistant), கட்டட வரைவாளர், மின்பணியாளர், மோட்டார் வண்டி கம்மியர், டீசல் கம்மியர் உள்ளிட்ட பல தொழிற்பிரிவுகளில் சேர முடியும்.


மேலும், இன்டஸ்ட்ரியல் ரோபோடிக்ஸ், மெக்கானிக் எலக்ட்ரிக் வெய்க்கில், CNC மெசினிங் போன்ற நவீன தொழிற்நுட்பங்களும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. அனைத்து மாணவர்களும் www.skilltraining.tn.gov.in இணையதளத்தில் ரூ.50/- கட்டணத்தை செலுத்தி விண்ணப்பிக்கலாம். விண்ணப்பத்தில் ஆதார், மதிப்பெண் பட்டியல், சமூகச் சான்றிதழ், புகைப்படம், மொபைல் எண், Email ID உள்ளிட்டவை தேவையாகும்.


பயிற்சி காலத்தில் மாதம் ரூ.750/- உதவித்தொகை, இலவச பாடநூல்கள், சீருடை, கருவிகள், பேருந்து பயண அட்டைகள் வழங்கப்படும். மேலும் தமிழ்ப்புதல்வன் மற்றும் புதுமைப்பெண் திட்டத்தின் கீழ் மாதம் ரூ.1000/- கல்வி உதவித்தொகையும் கிடைக்கும். ஆண் மற்றும் பெண் பயிற்சியாளர்களுக்கான விடுதி வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. மேலும் விபரங்களுக்கு 8098663711, 9688675686, 9499055840 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம். தகுதியான மாணவர்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி தொழில் கல்வியில் தங்களை முன்னேற்றிக் கொள்ள மாவட்ட ஆட்சியர் திரு.ரெ.சதீஸ், இ.ஆ.ப., அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளார். 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies