Type Here to Get Search Results !

கக்கன் அவர்களின் 117வது பிறந்த நாள் விழாவில் கல்வி உபகரணங்கள் வழங்கும் விழா.


தருமபுரி, ஆடவை (ஆனி) 05-

தர்மபுரி மாவட்டம் பிடமனரி பகுதியில், முன்னாள் அமைச்சரும் சுதந்திரப் போராட்ட வீரருமான கக்கன் அவர்களின் 117வது பிறந்த நாளை முன்னிட்டு, சமூக நல பணிகளை முன்னிலைப்படுத்தும் வகையில் கக்கன் இளைஞர் நற்பணி சங்கம் சார்பில் விழா ஏற்பாடு செய்யப்பட்டது.


இந்த விழாவில், பிடமனரியில் அமைந்துள்ள அரசு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் கல்வி பயிலும் 75க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர்களுக்கு நோட்டு புத்தகம், பென்சில், பேனா உள்ளிட்ட கல்வி உபகரணங்கள் இலவசமாக வழங்கப்பட்டன.


விழாவுக்கு பள்ளியின் தலைமை ஆசிரியர் தலைமை வகித்தார். குழந்தைகளின் கல்வி வளர்ச்சிக்காக இத்தகைய சமூக செயற்பாடுகள் ஊக்கமளிக்கின்றன என்ற வகையில், பள்ளி ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் நல்ல வரவேற்பை தெரிவித்தனர்.


இந்த நிகழ்ச்சியில் கக்கன் நற்பணி மன்றம் சார்பாக பாவல் ராஜ், சிவா, விஜய், கமலக்கண்ணன், கபில்தேவ், நரேன், முனியப்பன், செந்தில் உள்ளிட்ட குழுவினர் பங்கேற்றனர். பிறந்த நாள் விழாவை நினைவுகூர்ந்து மாணவர்களுக்கு உதவும் வகையில் நடைபெற்ற இந்த நிகழ்வு சமூக ஒற்றுமையின் முக்கியத்துவத்தையும், கக்கன் அவர்களின் சாதனைகளை நினைவுகூரும் நாளாகவும் அமைந்தது. 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies