Type Here to Get Search Results !

தர்மபுரி மாவட்ட தொழில் மையத்தில் EDP பயிற்சி முகாம் – 29 பயனாளிகளுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.


தருமபுரி, ஜூன் 11-

தர்மபுரி மாவட்ட தொழில் மையத்தில், கடந்த ஜூன் 9 ஆம் தேதி முதல் 11 ஆம் தேதி வரை, பிரதம மந்திரியின் உணவு பதப்படுத்தும் குறுந்தொழில் நிறுவனங்களை ஒழுங்குபடுத்தும் திட்டத்தின் (PMFME Scheme) கீழ் தொழில் முனைவோர் மேம்பாட்டு பயிற்சி முகாம் (EDP Training) நடைபெற்றது. இந்த முகாம் தமிழ்நாடு தொழில் முனைவோர் மேம்பாட்டு நிறுவனமான EDI-TN மூலமாக வழங்கப்பட்டது.


மொத்தம் 29 பயனாளிகள் இதில் கலந்து கொண்டு பயிற்சி பெற்றனர். இந்த பயிற்சி முகாமை மாவட்ட தொழில் மைய மேலாளர் திரு. சுப்பையா பாண்டியன் துவக்கி வைத்தார். தொடர்ந்து, தர்மபுரி மாவட்ட வளாளர் திருமதி சரண்யா மற்றும் EDI-TN மாவட்ட மேலாளர் திரு. கௌதம் சண்முகம் ஆகியோர் பங்கேற்று பயனாளர்களை ஊக்கப்படுத்தி பேசினர்.


பயிற்சியாளர்களாக திரு. கண்ணன் மற்றும் திரு. பூவிழி ஆகியோர் பங்கேற்று, தொழில் தொடக்கத்தில் எதிர்கொள்ளும் சவால்கள், வாய்ப்புகள், நிதி ஆதரவு பெறும் வழிமுறைகள், சந்தை பரப்பு மற்றும் வணிக வளர்ச்சி குறித்த பல்வேறு தலைப்புகளில் பயனுள்ள ஆலோசனைகள் மற்றும் வழிகாட்டுதல்களை வழங்கினர். பயிற்சி முடிவில், முகாமில் பங்கேற்ற அனைத்து 29 பயனாளிகளுக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. இந்த முகாம் தொழில்முனைவோர்களுக்கு பயனளிக்கக்கூடியதாக அமைந்தது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies