Type Here to Get Search Results !

மாரண்டஅள்ளி காந்தி நகரில் புதுப்பிக்கப்பட்ட காந்தி சிலைக்கு மாலையணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.


மாரண்டஅள்ளி, ஜூன் 11-

தர்மபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி பேரூராட்சி வார்டு எண் 14–ல் உள்ள காந்தி நகரில், பழுதடைந்து அப்புறப்படுத்தப்பட்டிருந்த மகாத்மா காந்தி சிலை மீண்டும் புதுப்பித்து நிறுவப்பட்டு, பேரூராட்சி சார்பில் மரியாதை நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த பணியை அதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு பொருளாளர் திரு ரமேஷ் குமார் அவர்கள், தனது சொந்த செலவில் மேற்கொண்டார். பணி நிறைவடைந்ததைத் தொடர்ந்து, பேரூராட்சி தலைவர் எம்.ஏ. வெங்கடேசன் மற்றும் மாரண்டஅள்ளி போலீஸ் இன்ஸ்பெக்டர் வெங்கட்ராமன் ஆகியோர் காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

பின்னர், பேரூராட்சி கவுன்சிலர் திருமதி அனிதா ரமேஷ் குமார், பொதுமக்கள் முன்னிலையில் மாலை அணிவைத்து மகாத்மா காந்திக்கு மரியாதை செலுத்தினார். நிகழ்ச்சியில் கவுன்சிலர்கள், அரசியல் கட்சியினர், காவல் துறையினர் மற்றும் பொதுமக்கள் பங்கேற்று, நிகழ்வை சிறப்பித்தனர். அதையடுத்து, மக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டு, அனைவரும் மகிழ்ச்சியுடன் நிகழ்வை அனுபவித்தனர். 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies