Type Here to Get Search Results !

"எங்கு வேண்டுமானாலும் சொல்லுங்கள், எங்களை ஒன்றும் செய்ய முடியாது!" – பொதுமக்கள் அதிர்ச்சி!.


பாப்பிரெட்டிப்பட்டி, ஜூன் 12-

தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி பேரூராட்சியில் அமைந்துள்ள பஸ்நிலையம் மற்றும் அரசு கலைக்கல்லூரி நுழைவாயில் அருகே, சர்வே எண்கள் 29/6 மற்றும் 31/1 ஆகிய இடங்களில் உள்ள அரசு புறம்போக்கு மற்றும் ஓடை புறம்போக்கு தரிசு நிலங்கள் தனி நபரால் அக்கிரமிக்கப்படுள்ளது என சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.


இதுகுறித்து சமூக ஆர்வலர் ஒருவர் கூறுகையில், “நான் பாப்பிரெட்டிப்பட்டியில் செயல்படும் ஒரு சமூக ஆர்வலர். பஸ்நிலையம் மற்றும் அரசு கலைக்கல்லூரி நுழைவாயில் அருகே உள்ள சர்வே எண் 29/6 மற்றும் 31/1 ஆகிய இடங்களில், சுமார் ரூ.50 கோடி மதிப்புடைய அரசு புறம்போக்கு மற்றும் ஓடை நிலங்கள் உள்ளன.


இந்த நிலங்கள் தற்போது சில செல்வாக்கு வாய்ந்த தனிநபர்களால் சட்டவிரோதமாக ஆக்கிரமிக்கப்பட்டு, அங்கு அடுக்குமாடி கடைகள் மற்றும் வீடுகள் கட்டப்பட்டுள்ளன. இதைப் பற்றி நான் மற்றும் சில பொதுமக்கள் கேட்கும்போது, அவர்கள் 'எங்கு வேண்டுமானாலும் சொல்லுங்கள்; எங்களை ஒன்றும் செய்ய முடியாது' என்று மிரட்டும் வகையில் பேசுகிறார்கள்.


இது குறித்தும், நில மீட்பு நடவடிக்கைக்காகவும், நான் கீழ்கண்ட அலுவலர்களிடம் முறையாக மனுக்கள் அளித்துள்ளேன்:

  • தமிழக முதல்வரின் தனிப்பிரிவு

  • மக்கள் குறைதீர்க்கும் மன்றம், தருமபுரி

  • மாவட்ட ஆட்சியர்

  • மாவட்ட வருவாய் அலுவலர்

  • பாப்பிரெட்டிப்பட்டி வட்டாட்சியர்


ஆனால் இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இது அரசு மற்றும் பேரூராட்சி நிர்வாகத்திற்கு வருவாய் இழப்பை ஏற்படுத்துவதுடன், அந்த பகுதியில் அரசு அலுவலகங்கள், மாணவர் விடுதிகள் போன்றவற்றுக்கும் இடவசதி இல்லாத நிலையை உருவாக்கியுள்ளது.


இந்த ஆக்கிரமிப்பு தொடர்பான அனைத்து ஆதார ஆவணங்களும் என்னிடம் உள்ளன. பொதுநலனுக்காக அரசு அதிகாரிகள் இதுகுறித்து உரிய ஆய்வு நடத்தி, அரசு நிலம் மீட்கப்பட வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கை” என சமூக அவர் தெரிவித்தார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies