Type Here to Get Search Results !

தருமபுரி மாவட்டத்தில் உலக உணவு பாதுகாப்பு தின விழா கொண்டாட்டம்.


தருமபுரி, ஜூன் 07-

உலக உணவு பாதுகாப்பு தினத்தையொட்டி, தருமபுரி மாவட்ட உணவு பாதுகாப்புத் துறையும், தனியார் பால் நிறுவனமான 'தொட்லா டைரி' நிறுவனமும் இணைந்து, அந்த நிறுவன வளாகத்தில் விழிப்புணர்வு நிகழ்வை இணைந்து நடத்தின.

இந்த நிகழ்வில் பால் நிறுவனத்தின் மனிதவள மேலாளர் ரஞ்சித் குமார் வரவேற்புரையுடன் துவக்கிக் கொண்டு, பிளான்ட் மேலாளர் நவீன், மண்டல மேலாளர் சிவப்பிரகாசம், தருமபுரி மற்றும் பென்னாகரம் ஒன்றிய உணவு பாதுகாப்பு அலுவலர் நந்தகோபால் ஆகியோர் முன்னிலையில், மாவட்ட நியமன அலுவலர் மருத்துவர் கைலாஷ்குமார் தலைமையில் விழா நடைபெற்றது.


2025ஆம் ஆண்டுக்கான கருப்பொருள் – “Food Safety: Science in Action” என்பதை மையமாகக் கொண்டு விழிப்புணர்வு நிகழ்வு நடந்தது. இந்த நிகழ்வில், உணவு பாதுகாப்பின் அடிப்படை அம்சங்கள், தன் சுத்தம், சமையலறை சுத்தம், பாதுகாப்பான தயாரிப்பு நடைமுறை, உணவு தவறானதும், கலப்படமிருந்தாலும் எதிர்விளைவுகளை ஏற்படுத்தும் என்பதையும், உணவு ஒட்டுமொத்தமாக நன்மையை வழங்க வேண்டும் என்பதையும் வலியுறுத்தினார்.


ஐந்து முக்கிய தூண்கள் பற்றிய தகவல்:

  1. தனிநபர் மற்றும் சுற்றுப்புற சுத்தம்.

  2. சமையல் முறைகளில் சுகாதார நடைமுறை.

  3. உணவுப் பொருள் வாங்கும் முன் லேபிள் தகவல்கள் கவனித்தல்.

  4. உணவுப் பொருள் கெடாமல், கலப்படமின்றி இருப்பதை உறுதி செய்தல்.

  5. உண்ணும் உணவின் தகவல்களை நன்கு அறிந்து தேர்வு செய்தல்.


கலப்படம் கண்டறியும் செயல் விளக்கம்:
தொல்லா டைரி வளாகத்தில், உணவுப் பொருட்களில் வீட்டு அளவில் கலப்படத்தை எளிதில் அறிய முடியும் வகையில் செயல் விளக்கம் வழங்கப்பட்டது. இதில் தேயிலை, தேன், எண்ணெய், நெய், மஞ்சள் தூள், மிளகு, சாயம் சேர்க்கப்பட்ட பட்டாணி போன்றவற்றில் கலப்படம் எவ்வாறு காணப்படுகின்றது என்பது குறித்து தொழில்நுட்ப விளக்கங்கள் வழங்கப்பட்டன.

நிறைவாக, “பாதுகாப்பான உணவை மேம்படுத்தவும், உணவால் பரவும் ஆபத்துக்களை தடுக்கும் உறுதிமொழி” அனைத்து பங்கேற்பாளர்களிடமும் எடுத்துக்கொள்ளப்பட்டது. சுமார் 75க்கும் மேற்பட்ட நிறுவன மேலாளர்கள், மேற்பார்வையாளர்கள், பணியாளர்கள் நிகழ்வில் பங்கேற்றனர். நிகழ்ச்சியின் முடிவில், நியமன அலுவலர், நிறுவனத்தின் பால் உற்பத்தி செயல்முறைகள் மற்றும் பாதுகாப்பு அம்சங்களை நேரில் ஆய்வு செய்தார். மூடுபணி நன்றி உரையை மேலாளர் வினோத் வழங்கினார். 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies