Type Here to Get Search Results !

பென்னாகரம் அருகே மலைவாழ் மக்களுக்கு சட்ட உதவி மற்றும் விழிப்புணர்வு முகாம் – மாவட்ட நீதிபதி தலைமையில் நடைபெற்றது


பென்னாகரம், ஜூன் 8 –

தருமபுரி மாவட்டம், பென்னாகரம் அருகே உள்ள போடூர் செக் போஸ்ட் பகுதியில், மலைவாழ் மக்களுக்காக சட்ட உதவி மற்றும் சட்ட விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. இது, தேசிய மக்கள் நீதிமன்றத்தை முன்னிட்டு பென்னாகரம் வட்ட சட்டப் பணிகள் குழுவினால் நடத்தப்பட்டது.


இந்த நிகழ்ச்சிக்கு வட்ட சட்ட பணிகள் குழுவின் தலைவரும், மாவட்ட உரிமையியல் மற்றும் நீதித்துறை நடுவரும் ஆகிய ஜே. நாகலட்சுமி (எ) விஜயராணி அவர்கள் தலைமை வகித்தார். முதுநிலை நிர்வாக உதவியாளர் சந்தானம் வரவேற்புரை நிகழ்த்தினார். முகாமில் பென்னாகரம் வட்டாட்சியர் பிரசன்ன மூர்த்தி, இன்ஸ்பெக்டர் குமரவேல் பாண்டியன், ஒகேனக்கல் வனசரக அலுவலர் சிவகுமார், பேரூராட்சி அலுவலக அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு உரையாற்றினர்.


மேலும், பென்னாகரம் வழக்கறிஞர்கள் சங்கத்தினரான தலைவர் மகாலிங்கம், செயலாளர் பாலசரவணன், முன்னாள் நிர்வாகிகள் மாதையன், வீராசாமி, மூத்த வழக்கறிஞர்கள் அசோகன், சரவணன் உள்ளிட்ட பலர் மலைவாழ் மக்களிடம் நேரடியாக உரையாற்றி சட்ட உதவி மற்றும் அவசியத்தை விளக்கியனர்.


இந்நிகழ்ச்சியின் இறுதியில், நடுவர் திருமதி விஜயராணி அவர்கள், மலைவாழ் மக்களின் குறைகளை நேரில் கேட்டறிந்து, வன உரிமைச் சட்டம், வனத்திலிருந்து உரிமையுடன் பொருட்களை சேகரிக்கும் நடைமுறை, சட்ட விரோத நடவடிக்கைகளுக்கு எதிரான விழிப்புணர்வு, தொழில் வாய்ப்புகள் உருவாக்கம், மற்றும் அடிப்படை தேவைகளுக்கான உரிமைகள் ஆகியவற்றை விளக்கினார்.


அத்துடன், மக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களும் பெற்றுக்கொண்டு, அவற்றில் உடனடியாக நடவடிக்கை எடுக்க அதிகாரிகளை வழிநடத்தினார். முகாமின் இறுதியில், அப்பகுதி பள்ளி மாணவர்களுக்கு கல்வி தேவைகளுக்கான எழுது பொருட்கள் வழங்கப்பட்டன. 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies