Type Here to Get Search Results !

உலக குருதி கொடையாளர் தினத்தில் மை தருமபுரி அமைப்பின் சார்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.


தருமபுரி, ஜூன் 14:

உலக ரத்ததான தினத்தையொட்டி, தருமபுரி மாவட்டத்தில் செயல்படும் சமூகநல அமைப்பான “மை தருமபுரி” சார்பில், டான் சிக்சாலையா பள்ளி வளாகத்தில் மாணவர்களுக்கு ரத்ததானம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

இந்நிகழ்ச்சியில், மாணவர்கள் ரத்ததான உருவத்தில் அமர வைக்கப்பட்டு, சிவப்பு பலூன்கள் பறக்கவிடப்பட்டன. எதிர்கால சமூகத்தின் உறுப்பினர்களான மாணவர்கள், இரத்ததானத்தின் சமூக அவசியம் குறித்து விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும் என்ற நோக்கத்துடன் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்த விழிப்புணர்வு நிகழ்வில், டான் பள்ளி நிர்வாக இயக்குநர் உதயகுமார், செயலாளர் சவிதா உதயகுமார், மை தருமபுரி அமைப்பின் கௌரவத் தலைவர் C.K.M. இரமேஷ், BGR மருத்துவமனை மருத்துவர் ராஜேஷ், மாருதி இரத்த வங்கி பிரதிநிதி வெங்கடாசலம், பியூவிஷன் உதயகுமார், எண்ணங்களின் சங்கமம் மாநில ஒருங்கிணைப்பாளர் பிரகாஷ், செய்தியாளர் நந்தகுமார், பத்திரிகையாளர் பிரேம், பள்ளி முதல்வர் ஜீவா உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றனர்.


மை தருமபுரி அமைப்பின் நிறுவனத் தலைவர் சதீஸ் குமார் ராஜா, செயலாளர் தமிழ்செல்வன், ஒருங்கிணைப்பாளர் அருணாசலம் மற்றும் அமைப்பாளர்கள் செந்தில், கிருஷ்ணன், சையத் ஜாபர், தன்னார்வலர்கள் கணேஷ், கோகுல்ராஜ், குணசீலன், அம்பிகா, பிரேமா ஆகியோர் விழிப்புணர்வு நிகழ்வை ஒருங்கிணைத்தனர். 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies