Type Here to Get Search Results !

உலக ரத்தக் கொடையாளர்கள் தினத்தில் தருமபுரியில் மை தருமபுரி அமைப்பின் ரத்ததான முகாம்.


தருமபுரி, ஜூன் 14 – 

உலக ரத்தக் கொடையாளர்கள் தினத்தை முன்னிட்டு, தருமபுரி மாவட்டத்தில் சமூக சேவையில் முன்னிலை வகிக்கும் மை தருமபுரி அறக்கட்டளை, எண்ணங்களின் சங்கமம், WE FOR YOU அமைப்பு மற்றும் பசுமை மற்றும் கல்வி அறக்கட்டளை ஆகிய அமைப்புகள் இணைந்து ரத்ததான முகாமை நடத்தின.


டான் சிக்ஷாலயா பள்ளி வளாகத்தில் நடைபெற்ற இம்முகாமில் 20க்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் ரத்ததானம் செய்தனர். பொதுமக்களிடையே ரத்ததானத்தின் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் இந்த முகாம் நடைபெற்றது.


இந்நிகழ்வில் தருமபுரி அரசு மருத்துவமனை ரத்த வங்கி டீம், டான் சிக்ஷாலயா பள்ளி முதல்வர் ஜீவா, எண்ணங்களின் சங்கமம் ஒருங்கிணைப்பாளர் பிரகாஷ், பசுமை கல்வி அறக்கட்டளை சங்கர், மை தருமபுரி அமைப்பின் நிறுவனர் சதீஷ் குமார் ராஜா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு முகாமை சிறப்பித்தனர். 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies