Type Here to Get Search Results !

வத்தல்மலையில் மலைவாழ் மக்களுக்கு இலவச உணவு பொருள் தயாரிப்பு மற்றும் மதிப்பு கூட்டல் பயிற்சி தொடக்கம்.


தருமபுரி, ஜூன் 14-

தருமபுரி மாவட்டம், வத்தல்மலை பகுதியில் வசிக்கும் மலைவாழ் மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கத்தில், வனத்துறை (TBGP மற்றும் JICA) உதவியுடன் ஸ்ரீதேவி மஹா கல்வி மற்றும் தொண்டு அறக்கட்டளை சார்பாக இலவச சிறுதானிய உணவுப் பொருட்கள் தயாரித்தல் மற்றும் காய்கறிகள், பழங்களின் மதிப்பு கூட்டுதல் தொடர்பான பயிற்சி தொடங்கப்பட்டது.


இந்த பயிற்சியை தருமபுரி வனச்சரக அலுவலர் திரு. முரளி அவர்கள் துவக்கி வைத்து, பயிற்சியின் மூலம் மலைவாழ் மக்கள் தொழில் முனைவோராக உருவாக வேண்டும் என்பதே இதன் நோக்கமாகும் என தெரிவித்தார். பயிற்சியை முடித்த பின்னர், வனத்துறை சார்பில் தொழில் வாய்ப்புகள் உருவாக்கப்படும் என்றும் கூறினார். இந்நிகழ்ச்சியில் வனத்துறையின் பிற அதிகாரிகள், ஸ்ரீதேவி மஹா அறக்கட்டளையின் தலைவர் மற்றும் இயக்குநர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies