Type Here to Get Search Results !

பாலக்கோடு அருகே 2 லட்சம் டன் மாம்பழங்கள் அழுகும் அபாயம் – அரசு மாங்கூழ் தொழிற்சாலை அமைக்கப்படுமா?


பாலக்கோடு, ஜூன் 17-

தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு, காரிமங்கலம், மாரண்டஹள்ளி, பெரியாம்பட்டி, மகேந்திரமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் நடப்பு பருவத்தில் 15 ஆயிரம் ஏக்கர் நிலத்தில் விளைந்த சுமார் 2 லட்சம் டன் மாம்பழங்கள் உரிய விலை இல்லாமல் மரத்திலேயே பழுத்து வீணாகி வருகிறது. தனியார் நிறுவனங்கள் கிலோ ரூ.3 என்ற குறைந்த விலைக்கு சின்டிகேட் அமைத்து கொள்முதல் செய்வதால் விவசாயிகள் நஷ்டத்தில் தள்ளப்பட்டுள்ளனர்.


விலை வீழ்ச்சியால் அறுவடைக்கே முன்வர முடியாமல் திணறும் விவசாயிகள், பழங்களை சாலையோரம் கொட்டும் நிலைக்கும் சென்றுள்ளனர். இது குரங்குகள், பறவைகளுக்குச் சத்தமாக மாறி வருகிறது. “விலை உயர்ந்தால் விளைச்சல் குறைவு; விளைச்சல் அதிகமானால் விலை குறைவு” என்ற சூழலில் விவசாயிகள் தொடர்ந்து பாதிக்கப்படுகின்றனர்.


இதனை சமாளிக்க, பாலக்கோட்டை மையமாக கொண்டு அரசு மாங்கூழ் தொழிற்சாலை அமைக்க, அதன்மூலம் உற்பத்தி மாம்பழங்களுக்கு நிலையான விலை கிடைக்க, மற்றும் உள்ளூர் வேலைவாய்ப்பும் உருவாகும் என விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர். அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர். 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies