Type Here to Get Search Results !

அரூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி.


அரூர், ஜூன் 17-

தருமபுரி மாவட்டம், அரூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில், மாணவர்களுக்கு சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு, பள்ளி தலைமை ஆசிரியர் திரு. ஆறுமுகம் தலைமை வகிக்க, சாலை பாதுகாப்பு ஆய்வாளர், துணை ஆய்வாளர் மற்றும் காவல் துறை பாதுகாவலர்கள் முன்னிலை வகித்தனர்.


ஒருங்கிணைப்பாளராக நல்லாசிரியர் திரு. பழனிதுரை செயல்பட்டார். இந்த நிகழ்ச்சியில் பள்ளியின் மாணவர்களுக்கு, வாகன ஓட்டும்போது தலைக்கவசம் அணிவது, உரிய வாகன ஓட்டும் உரிமம் இல்லாமல் வாகனம் செலுத்தக்கூடாது, ஒழுங்கான விதிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்ற முக்கியமான தகவல்கள் தெளிவாகவும் சுலபமாகவும் எடுத்துரைக்கப்பட்டன.


மாணவர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் விளக்கக் காட்சிகள், கேள்வி-பதில் நிகழ்ச்சிகள் போன்றவை இடம்பெற்றன. நிகழ்ச்சியின் இறுதியில், மாணவர்கள் அனைவரும் “லைசன்ஸ் இல்லாமல் வாகனம் ஓட்டமாட்டோம், தலைக்கவசம் அணிவோம்” என்று உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies