அரூர், ஜூன் 09-
தர்மபுரி மாவட்டம் அரூர் வட்டம், வேட கட்ட மடுவு பஞ்சாயத்துக்கு உட்பட்ட ஆண்டியூர் கிராமத்தில் சுமார் 30 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் குடிநீர், மண் சாலை, மின்விளக்கு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லாமல் கஷ்டப்படுகின்றனர்.
மக்கள் கடந்த 2022, 2023, 2024 ஆண்டுகளில் ஊராட்சி மன்றத் தலைவர் மற்றும் செயலாளரிடம் பலமுறை மனுக்கள் கொடுத்துள்ளனர். தலைவராக இருந்த ராணி முத்துவுக்கும், செயல் அலுவலருக்கும் மூன்று முறை மனு கொடுக்கப்பட்டிருந்தாலும், எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
மேலும், இந்த பகுதியில் மயான வசதியும் மிக குறைவாக உள்ளது. நான்கு வழிசாலை வந்த பிறகு பழைய மயானம் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. பஞ்சாயத்து ஒன்றிய செயலாளரிடம் புதிய மயானத்திற்கு நிலம் ஒதுக்கிட கோரிக்கை வைத்தாலும், அதும் இன்றுவரை நடக்கவில்லை.
“பலமுறை மனு கொடுத்தும் எதுவும் நடக்கவில்லை. எப்போது நம்மைப் பார்த்து யாராவது தயவுசெய்கிறார்கள்?” என்பதே இப்பகுதி மக்களின் மணக்குமுறல்".