தருமபுரி, ஜூன் 9:
பார்வையின்போது மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் திருமதி ஐ. ஜோதிசந்திரா உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
இதுகுறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்ததாவது:
“தமிழ்நாட்டில் அடுத்த 3 ஆண்டுகளில் உயர்கல்வி சேர்க்கை விகிதத்தை உயர்த்தும் நோக்குடன், 2022ஆம் ஆண்டு ‘நான் முதல்வன்’ திட்டம் பள்ளிக்கல்வி மற்றும் உயர் கல்வித் துறைகளின் கூட்டு முயற்சியாக தொடங்கப்பட்டது.
இந்த திட்டத்தின் முக்கிய அம்சமாக, பெற்றோர் அற்ற மாணவர்கள், மாற்றுத்திறனாளிகள், அகதிகள் முகாமில் வாழும் மாணவர்கள், ஒற்றை பெற்றோர் குழந்தைகள், குடும்ப நிலை காரணமாக கல்வியில் இடைவெளி ஏற்பட்டவர்கள், திருமண காரணமாக கல்வியை தொடர முடியாதோர் உள்ளிட்டோருக்கு தேவையான ஆலோசனைகள், வழிகாட்டுதல் மற்றும் ஆதரவுகள் வழங்கப்படுகின்றன.
மேலும், 11 மற்றும் 12ம் வகுப்புகளில் தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு தொழில்துறை சார்ந்த பாலிடெக்னிக் மற்றும் ஐடிஐ போன்ற பயிற்சிகள் குறித்து தெரிவிக்கப்பட்டு சேர்க்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
உயர்கல்வி, கலை மற்றும் அறிவியல், தொழிற்பயிற்சி (Polytechnic/ITI) உள்ளிட்ட கல்வி வழிகளுக்கான காலியிடங்கள், தகவல்கள் மற்றும் சந்தேக நிவாரண ஆலோசனைகள் அனைத்தும் இந்த கட்டுப்பாட்டு அறையின் மூலம் வழங்கப்படும். தருமபுரி மாவட்டத்தில் உள்ள அரசு கல்லூரிகள் மற்றும் அரசு தொழிற்பயிற்சி நிறுவனங்களில் சேர்க்கை தொடர்பான உதவிகளும் வழங்கப்படும்.”
மேலும், இத்திட்டம் தொடர்பான மேலதிக தகவல்களுக்கு மாவட்ட கட்டுப்பாட்டு அறைத் தொலைபேசி எண்கள்: 97888 58586 / 98940 32730 என்பவற்றை தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.