Type Here to Get Search Results !

ஒகேனக்கல் குடிநீர் குழாய்கள் இடமாற்றம் – தருமபுரியில் நான்கு நாட்கள் குடிநீர் விநியோகம் நிறுத்தம்.


தருமபுரி, ஜூன் 5-

திட்ட பராமரிப்பு கோட்டம், கிருஷ்ணகிரி கீழ் செயல்படும் ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டத்தின் மூலம், தருமபுரி மாவட்டத்தின் பென்னாகரம், காரிமங்கலம், பாலக்கோடு ஒன்றியங்கள் மற்றும் பாப்பாரபட்டி, காரிமங்கலம், மாரண்டஹள்ளி நகராட்சிகளுக்கு குடிநீர் விநியோகம் வழங்கப்பட்டு வருகிறது.

இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் சார்பில் காரிமங்கலம் ஒன்றியத்தில் உள்ள கெரகோடஹள்ளி பகுதியில் சாலை விரிவாக்கப் பணிகள் மற்றும் காரிமங்கலம் அரசினர் பெண்கள் கலைக்கல்லூரி மற்றும் பைசுஹள்ளி சட்டக் கல்லூரி பகுதிகளில் நடைபாதை மேம்பாலம் அமைக்கும் பணிகள் நடைபெறவுள்ளன.


இதன் காரணமாக, மேலே குறிப்பிடப்பட்ட பகுதிகளில் அமைந்துள்ள ஒகேனக்கல் குடிநீர் குழாய்களை இடமாற்றம் செய்யும் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. இதற்காக கீழ்காணும் தேதிகளில் குடிநீர் விநியோகம் தடைப்படும்:

  • 10.06.2025 – சட்டக் கல்லூரி, மாட்லாம்பட்டி பகுதியில்

  • 13.06.2025 – காரிமங்கலம் அரசினர் பெண்கள் கலைக்கல்லூரி பகுதியில்

  • 16.06.2025 முதல் 17.06.2025 வரை – கெரகோடஹள்ளி பகுதியில்


இதனால், காரிமங்கலம் ஒன்றியத்திற்குள் உள்ள 10 ஊராட்சிகளில்கெரகோடஹள்ளி, நாகனாம்பட்டி, அடிலம், பெரியாம்பட்டி, கோவிலூர், முருக்கம்பட்டி, இண்டமங்கலம், பைசுஹள்ளி, பூமாண்டஹள்ளி மற்றும் மல்லிக்குட்டை ஆகிய பகுதிகளில் நான்கு நாட்கள் குடிநீர் விநியோகம் பாதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


இதற்கிடையில் பொதுமக்கள், உள்ளூர் நீர் ஆதாரங்களை பயன்படுத்திக் கொள்ளவும், குடிநீரை சிக்கனமாக பயன்படுத்தவும் மாவட்ட நிர்வாகம் கேட்டுக்கொண்டு உள்ளது. இது குறித்து தருமபுரி மாவட்ட ஆட்சித் தலைவர் திரு. ரெ. சதீஸ், இ.ஆ.ப., அவர்கள் அறிவுறுத்தியுள்ளார். 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies