Type Here to Get Search Results !

தருமபுரியில் அரசு வழங்கும் இலவச விடுதி வசதிகள் – மாணவர்கள் விண்ணப்பிக்க அழைப்பு.


தருமபுரி, ஜூன் 5:

தமிழ்நாடு அரசின் சமூகநீதி அடிப்படையில், பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் சமூகங்களைச் சேர்ந்த மாணவர்களுக்காக தருமபுரி மாவட்டத்தில் மொத்தம் 64 அரசு விடுதிகள் செயல்பட்டு வருகின்றன. இதில் 36 விடுதிகள் மாணவர்களுக்காகவும், 28 விடுதிகள் மாணவியர்களுக்காகவும் வழங்கப்பட்டுள்ளன.

பள்ளி விடுதிகளில் 4ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்கள் சேரலாம். கல்லூரி விடுதிகளில் பட்டப்படிப்பு, பட்டமேற்படிப்பு, ஐடிஐ மற்றும் பாலிடெக்னிக் போன்ற தொழில்நுட்பப் படிப்புகளுக்கான மாணவர்கள் சேரத் தகுதியுடையவர்களாக இருக்கின்றனர்.


வசதிகள்:

  • தினமும் மூன்று வேளை உணவு, இலவச தங்கும் வசதி.

  • 10ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு நான்கு சீருடைகள்.

  • 10, 12ம் வகுப்புகளுக்கான NEET, JEE தேர்வுகளுக்கான வழிகாட்டி நூல்கள், வினா வங்கி நூல்கள்.

  • முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு ஜமக்காளம், பள்ளி மாணவர்களுக்கு ஆண்டுதோறும் பாய்கள், இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை போர்வைகள் வழங்கப்படும்.

  • மலைப்பகுதியில் இயங்கும் விடுதிகளில் கம்பளி மேலாடைகள் வழங்கப்படும்.


தகுதிகள்:

  • பெற்றோர்/காப்பாளர் வருட வருமானம் ரூ.2 லட்சத்திற்கு கீழ் இருக்க வேண்டும்.

  • பள்ளி மாணவர்களுக்கு, கல்வி நிலையத்திலிருந்து குறைந்தது 8 கிமீ தூரத்தில் இருப்பிடமாக இருக்க வேண்டும். இந்த நிபந்தனை மாணவியருக்கு பொருந்தாது.


விண்ணப்பம் பெறும் முறை:

தகுதியுள்ள மாணவர்கள் விடுதி காப்பாளர் அல்லது மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலகத்தில் இலவசமாக விண்ணப்பங்கள் பெறலாம்.

  • பள்ளி விடுதிகளுக்கான விண்ணப்பங்கள் 18.06.2025க்குள்

  • கல்லூரி விடுதிகளுக்கான விண்ணப்பங்கள் 15.07.2025க்குள் சமர்ப்பிக்க வேண்டும்.


விண்ணப்பிக்கும்போது சாதிச் சான்றிதழ் மற்றும் வருமானச் சான்றிதழ் தேவையில்லை. விடுதியில் சேரும் போது மட்டும் அவை சமர்ப்பிக்க வேண்டும். மேலும், ஒவ்வொரு விடுதியிலும் இலங்கைத் தமிழர் முகாம்களில் வசிக்கும் குழந்தைகளுக்காக 5 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. இவ்வாறு அரசின் விடுதி வசதிகள் குறித்து மாணவர்கள் பயன்பெறுமாறு தருமபுரி மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. ரெ. சதீஸ், இ.ஆ.ப., தெரிவித்துள்ளார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies